பிரதான செய்திகள்

தொழிற்சங்கங்களின் ஆதரவுகள் மீண்டும் மஹிந்தவுக்கு

அரசாங்கத்தின் புதிய வரிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிகவும் அநீதியான முறையில் அரசாங்கம் வரி அறவீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அரசாங்கத்தின் வரி விதிமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பாரிய போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக பல தொழிற்சங்கங்கள் உறுதியளித்துள்ளன.

இந்த வரி திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிடுவது தெளிவாக புரிகின்றது. வரி கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் நாட்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.

இம்முறை மே தினக் கூட்டமும் வரிச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் தொனிப் பொருளைக் கொண்டமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வர்த்தக அமைச்சின் ஊடாக அரிசி இறக்குமதி

wpengine

இரு சிறுநீரகங்களும் பாதிப்பு! வவுனியா சிறுவனுக்கு உதவி செய்யுங்கள்

wpengine

இரண்டு கோடி கஜமுத்துக்களுடன் கண்டியில் நால்வர் கைது.

wpengine