பிரதான செய்திகள்

தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவற்கு அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் இல்லை- பொன்சேகா

மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவற்கு அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தொற்று நோயை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகியுள்ளது எனவும் அது பற்றி பேசக் கூட அரசாங்கம் தொடர்ந்தும் முன்வருவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக மக்கள் அரசாங்கத்தின் மீது எதிர்பார்ப்பை வைக்காது, தாமே தமது பாதுகாப்பை தேடிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதை காணமுடியவில்லை.

தடுப்பூசி மூலம் தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள காத்திருந்த மக்களின் எதிர்பார்ப்பு சிதைந்து போயுள்ளது.

ஒக்ஸ்போர்ட் அஸ்ரா செனகா தடுப்பூசி மருந்தை வழங்க, இந்தியா, இலங்கையுடன் உடன்படிக்கை செய்திருந்தால், அந்த தடுப்பூசியை வழங்க இந்தியா கடமைப்பட்டுள்ளது எனவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள்! ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine

இன்று மஹிந்த,நாளை மைத்திரி புதிய மாற்றம்

wpengine

கல்வி நிர்வாக வேவையில் சித்தியடைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதி அமைச்சர்

wpengine