பிரதான செய்திகள்

தொண்டமானின் மகனுக்கு எச்சரிக்கை கொடுத்த கோத்தா

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் மகனால் நடத்தப்படும் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.


சில புகைப்படங்களைப் பார்த்த சுகாதார அதிகாரிகள் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், அதிருப்தியடைந்த ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்துமாறு, உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பில் இருந்து அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பூதவுடல் வேவல்டனிற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு பெருந்திரளான மக்கள் கூடியதுடன், பேரணியாக எடுத்துச் சென்றபோது ஊடகங்களில் வெளியாகிய புகைப்படங்களின் பின்னர், நிலைமையை அவதானித்த ஜனாதிபதி, கோபம் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அனைத்திற்கும் முன்னதாக மக்கள் நலனே தனக்கு முக்கியமானது என இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ஆறுமுகம் தொண்டனின் மரண ஊர்வலங்களின் போது அவரின் மகன் ஜீவன் தொண்டமான் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் செயற்படுவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம்

wpengine

தமிழ்-முஸ்லிம் மக்களை ஆத்திரமூட்டும் மைத்திரியின் நகர்வு

wpengine

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை (09) பதவிப் பிரமாணம்

wpengine