Breaking
Thu. Nov 28th, 2024

நேற்று இரவு பெய்த தொடர் கடும்மழையினால் களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்து கங்கையின் கரையோர கிராமமான மல்வானையின் சிலபகுதிகள் நீரினால் மூழ்கியுள்ளன, மல்வானையில் ரக்‌ஷபான,காந்திவளவ,கந்தவத்த போன்ற பிரதேசங்கள் மழை வெள்ளத்தால் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ரக்கஷபான பிரதேசத்தில் அமைந்துள்ள பூட் சிட்டி (food city) வெள்ளத்தினால் சூழப்பட்டிருப்பினும் இன்னும் கட்டிடத்திற்குள் நீரின் தாக்கம் ஏற்படவில்லை, இன்றும் தொடர்ந்து அடை மழை ஏற்பட்டால் இதனைவிடவும் பாதிப்புகள் அதிகமாகும் வாய்ப்புக்கள் இருக்கிறது. அத்தோடு மல்வானை-கொழும்பு வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மல்வானை-கொழும்பு வீதியில் ரக்‌ஷபான பிரதேசத்தை பிரதான பாதையை வெள்ளம் மூடியுள்ளதால் சிறியரக வாகனங்களின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. தொடர்ந்தும் நீர்மட்டம் அதிகரிப்பதாலும்,தொடர்மழையினாலும் இப்போதைக்கு போக்குவரத்து சீராகும் நிலையில் இல்லை.b8ea21d0-f189-4079-9337-48b350d3dcf8

கந்தவத்தை பிரதேசத்திலுள்ள அல் முபாறக் கனிஷ்ட பாடசாலைப் பிரதேசம் முற்றாக நீரினால் மூழ்கியுள்ள நிலையில் இன்று அந்தப்பாடசாலை மூடப்பட்டுள்ளது. பாடசாலைக்கு செல்லும் பிரதான பாதையை முற்றாக நீரினால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.b41bf25c-28eb-4594-80c1-17259e60cdf0

நாச்சியாதீவு பர்வீன்
மல்வானையிலிருந்து

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *