செய்திகள்பிரதான செய்திகள்

தொடர்ந்து இளைஞர்களை குறிவைக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள! கடத்தி செல்லப்பட்ட 2 இளைஞர்களில் ஒருவர் பலி, மற்ருமொருவர் வைத்தியசாலையில்.

இலஙகையில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் இளைஞர்களே அதிகம் இலக்காகி வருகின்றனர். அந்த வகையில் மேலும் ஒரு சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

அந்த சம்பவமானது கஹவத்த, யாயன்னா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு இளைஞன் கஹவத்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்த, யாயன்னா, கொஸ்கெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (30) இரவு வந்த நான்கு பேர், வீட்டிலிருந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் இருவரும் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குறித்த இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 22 வயது இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே நேரத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார், எதற்காக என்பது இன்னும் தெரியவில்லை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கஹவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

1ம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு!

Editor

ஐக்கிய தேசிய கட்சிக்குள்! பிரதமர் பதவி மோகம்

wpengine

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

Editor