பிரதான செய்திகள்

தொடராக இரண்டு முறை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத முசலி பிரதேச சபை செயலாளர்!

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மாலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது தொடராக இரண்டு முறை முசலி பிரதேச சபையின் செயலாளர் கூட்டங்களுக்கு கலந்துகொள்ள வில்லை என பிரதேச சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இதன் போது இணைக்குழுவின் தலைவர்கள் கேள்விகள் வினவிய போது முசலி பிரதேச சபையின் செயலாளர் ஏன்? வரவில்லை  என்றும் சபையின் ஊடாக என்ன வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றது எனவும் வினவிய வேலை எந்த வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்கள் எதும் தெரியவில்லை என்றும் பிரதேச சபை செயலாளருக்கு பதிலாக கூட்டத்திற்கு சமூகமளித்தவர் கருத்து தெரிவித்தார்.

முசலி பிரதேச சபை கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து இயங்கிக்கொண்டு வருகின்ற வேலை இதுவரைக்கும் பொது மையானங்கள்,பிரதேச உள்ளக வீதிகள்,கிராமங்களுக்கான தெரு விளக்குகள் இன்னும் சில வேலைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் இடங்களை அடையாளப்படுத்தவில்லை எனவும்  தெரிவிக்கின்றனர்.

இப்படியான பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் செயலாளர்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் எவ்வாறு மக்களின் தேவைகளை இனம்கண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ள போகின்றார்கள் என கண்டனம் தெரிவித்தனர்கள் என அறியமுடிகின்றது.

Related posts

சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை!

Editor

மன்னாரில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 42 தனிமையாக

wpengine

ரவிக்கு பின்னால் பல ஊழல் புள்ளிகள்! ரணில் பதவி விலக வேண்டும்.

wpengine