செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது, மாற்றுக்காணி ஒன்றே தீர்வு ! “அரசாங்கம்” .

தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது. அந்த விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் அமைந்துள்ள எந்த மதத் தலங்களையும் அகற்ற முடியாது. அது மத ரீதியான, இன ரீதியான வன்முறைகளுக்கே வழிவகுக்கும்.

மதத் தலங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதை கட்சிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் ஏற்கனவே நேரில் பேச்சு நடத்தியுள்ளார்.

அவர்கள் இணக்கமான தீர்வுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார்கள். பலர் மாற்றுக் காணிக்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், காணி உரிமையாளர்களைத் திசை திருப்பி அவர்களைத் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்தச் சிலர் முற்படுகின்றனர். – என்றார்.

Related posts

சதொச நிறுவனங்களை மூடி, ரிஷாட்டை பழிவாங்கும் மற்றொரு படலம் ஆரம்பம்!

wpengine

றிஷாட்டின் கைதுக்கு எதிராக வவுனியா நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

wpengine

உங்கள் மனைவியும் கோபப்படுபவரா? அப்பொழுது ஆண்களே இது உங்களுக்கு

wpengine