பிரதான செய்திகள்

தைபொங்கல் தினத்தில் வவுனியாவில் சோகம்

வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளர்.
வவுனியா ஈரட்டைபெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரட்டை பெரியகுளத்திற்கு அருகே ஐந்து இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டனர். அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் ஒருவர் தவறி வீழ்ந்தார்.

அவரை காப்பாற்ற சென்ற மற்றைய இளைஞரும் தவறி வீழ்ந்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தாக் கல்லூரியின் சாதாரணதர மாணவர்களான 16 வயதுடைய திபின்சன் மற்றும் கரிகரன் ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.

இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

பாரிய முதலையினை பிடித்த முஸ்லிம்கள்

wpengine

மதுபானசாலையை அகற்றுவதற்கு வவுனியா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம்.

wpengine

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானது!

Editor