பிரதான செய்திகள்

தேர்தல் வட்டாரம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் கூட்டம்

வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட நெளுக்குளம் பிரிவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுமக்கள் கருத்தாடல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, நேற்றைய முன் தினம்(05) நெளுக்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உபசெயலாளரும், மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் இணைப்புச் செயலாளருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையிலும், ஏற்பாட்டிலும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், மாகாணசபை உறுப்பினரும், முன்னைநாள் சுகாதார அமைச்சருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

கலந்துரையாடலில் கிராமங்களின் முக்கிய பொதுப்பிரச்சினைகள், தேவைகள், புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை மற்றும் புதிய தேர்தல் முறைமை, சமகால அரசியல் நிலைமை, வட்டாரக் கிளைகளின் இருப்பின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

Related posts

காலி – கொழும்பு வீதியில் புதிய பஸ் சேவை ஆரம்பம்!

Editor

விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்யவேண்டும் -பொதுபல சேனா மகஜர்

wpengine

ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகப்பெருமவை நியமிக்க சுதந்திர மக்கள் சபை தீர்மானம்!

Editor