பிரதான செய்திகள்

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் புரெவி தாக்கம்!மாந்தை மேற்கு பகுதியில் கால்நடை பாதிப்பு

wpengine

கப்பல் வராத துறைமுகம், விமானம் தரையிறங்காத விமான நிலையம்! நல்லாட்சி அரசை பற்றி மஹிந்த பேச முடியாது.

wpengine

புதிதாக 3 நியமனங்களை வழங்க பாராளுமன்றக் குழு அங்கீகாரம்!

Editor