ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் நவம்பர் 4ஆம் திகதி வரை ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் 1257 மில்லியன் ரூபாய்களை பிரசாரத்துக்காக செலவிட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகள் தொடர்பான நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்காக 750 மில்லியன் ரூபாய்களையும், ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித்துக்காக 470 மில்லியன் ரூபாய்களையும் செலவிட்டுள்ளது.
பொதுஜன பெரமுன அச்சு ஊடக விளம்பரங்களுக்காக 603 மில்லியன்களையும், இலத்திரனியல் ஊடகங்களுக்காக 94 மில்லியன் ரூபாய்களையும் செலவிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அச்சு ஊடகங்களுக்காக 104 மில்லியன்களையும், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் ஏனைய விடயங்களுக்காக 253 மில்லியன்களை செலவிட்டுள்ளது.
மேலும் தேசிய மக்கள் சக்தி 31 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாகவும் தேர்தல் வன்முறைகள் தொடர்பான நிலையம் தெரிவித்துள்ளது.