தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி ஆகியனவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்காகவும் பிரச்சார நோக்கில் தேசிய கீதம் அல்லது தேசிய கொடியை பயன்படுத்த அனுமதிக்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கட்சிகளை, வேட்பாளர்களை அல்லது குழுக்களை பிரச்சாரம் செய்யும் நோக்கில் இவ்வாறு கொடி, கீதம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.
மாகாண, பிரதேச கொடிகள், மதக் கொடிகள், மதத் தலைவர்களின் அல்லது புனிதா்களின் படங்கள் போன்றனவும் தேர்தல் விளம்பரங்களில் உள்ளடக்க அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனங்கள் வாக்குரிமையை ஓர் அடிப்படை உரிமையாகக் கருத்திற் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் ஊடக நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளது.