பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பில் 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை 180 முறைப்பாடுகள்..!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை பெறப்பட்டவையாகும்.

அதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 179 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளது.

கிடைக்கப்பெற்ற 180 முறைப்பாடுகளில் இதுவரை 133 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், 47 முறைப்பாடுகளை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

வஸீம் தாஜுதீன் கொலை! சேனாநாயக்கவை சந்தித்த மஹிந்த,ரோஹித்த

wpengine

ஆசிரியர் கலாசாலை பயிற்சி! ஆசிரியர்களின் கண்காட்சி

wpengine

ISIS இயக்கத்தை உருவாக்கியவர் ஒபாமாவா?

wpengine