பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பில் கட்சி செயலாளர்களை சந்திக்க உள்ள மஹிந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகிதாசார முறையிலா அல்லது தொகுதி வாரியான முறையிலா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து ஆளும் எதிர்க்கட்சியினரிடையே கருத்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தொகுதி வாரியிலான புதிய தேர்தல் முறைமையானது தமக்கு பாதகமாக அமையும் என சிறு அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

எனினும், சிறு கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய தேர்தல் முறைமையில் திருத்தங்கள் செய்யப்படும் என அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது.

எனினும், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து, ஆளும் தரப்பினரிடையே இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

எல்லை நிர்ணய அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், அரசயில் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் கலந்துரையாடலொன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எண்ணெய் பொருளாதாரத்திலிருந்து விலகி நாட்டை சீர்திருத்த சவுதி ஒப்புதல்

wpengine

தேசியக் கொடியை அகற்றி, கருப்புக் கொடியை ஏற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்.!

Maash

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்!

Editor