பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வு தகவல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வு சேவை நடத்திய இரகசிய ஆய்வு கூட்டரசுக்குள் புதிய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேர்தல் தொடர்பில் விசேட ஆய்வொன்றை நடத்திய தேசிய புலனாய்வு சேவை அதன் அறிக்கையை அரச தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பியிள்ளது.

அந்த அறிக்கை ஆளும் கூட்டணி அரசுக்குள் மோதல் நிலையை உருவாக்கும் வகையில் அமைத்திருப்பதாக மேற்படி அரச வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அரச தேசிய புலனாய்வு சேவையின் அந்த அறிக்கையின்படி எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கணிசமான சபைகளை கைப்பற்றும் எனவும், அதற்கு அடுத்தபடியாக கூட்டு எதிரணி பெரும்பாலான இடங்களில் ஆதிக்கம் செலுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி நூற்றுக்கு 41 வீத ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், நூற்றுக்கு 33 வீத ஆதரவு கூட்டு எதிர்க்கட்சிக்கும், நூற்றுக்கு 19 வீத ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், நூற்றுக்கு 4 வீத ஆதரவு ஜே.வி.பியினருக்கும் இப்போதுவரை இருப்பதாக சொல்லப்படுகிறது.
தேசிய புலனாய்வு சேவையின் இந்த அறிக்கை கூட்டரசின் பிரதான பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக அந்தக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

பிணைமுறி மோசடி விவகாரம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை முறையாக எதிர்கொண்டும் அவற்றுக்கு உரிய பதிலை வழங்கியும் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதால் மக்கள் மத்தியில் அனுதாபத்துடனான ஆதரவு அலையொன்று அக்கட்சிக்கு சார்பாக வீசுவதாக அரச புலனாய்வுச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

புலனாய்வுச் சேவையின் இந்த அறிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இப்போதுள்ள அரசியல் நிலைமை தலைகீழாக மாறும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ள வியூகம் வகுப்பதற்காக கடந்த சில தினங்களாக மந்திரலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

இதனால் தேர்தலுக்கு முன்னர் அதிரடி மாற்றங்கள் கொழும்பு அரசியலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Related posts

பலத்த பாதுகாப்புடன் ஞானசார தேரர் விஜயம்

wpengine

Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்.!

Maash

வரிகளை நீக்குமாறு அமைச்சர் உதய கம்பன்பில நிதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை

wpengine