பிரதான செய்திகள்

தேர்தல் தொடர்பான சுகாதார ஒழங்கு வீதிகள்

கொரோனவுக்கு மத்தியில் பொதுத்தேர்தலை முன்னெடுப்பது தொடர்பான சுகாதார ஓழுங்கு விதிகள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வர்த்தமானியில் அரசியல்கட்சிகள், சுயாதீனக் குழுக்களின் வேட்பாளர்கள், மற்றும் ஊடகங்களுக்கான ஒழுங்குவிதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


ஏற்கனவே இந்த ஒழுங்குவிதிகள் நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


தேர்தல் பிரசாரங்கள், தேர்தல் பிரசாரக்கூட்டங்கள், சமூக இடைவெளி, தேர்தல் வாக்குசாவடி அமைப்பு, வாக்குகளை கணக்கிடும்போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்புக்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.


இந்தநிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி தேர்தல் திகதியை தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது.


பெரும்பாலும் தேர்தல் திகதி ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா – 2016

wpengine

மன்னார்,மடுவில் உருக்குலைந்த நிலையில் சடலம்.

wpengine

குறைந்த மட்டத்தில் இருந்த இலங்கையின் நகரமயமாக்கல் அன்மைய 10 வருட காலப்பகுதியில் 45% ஆக உயர்வு!

Editor