பிரதான செய்திகள்

தேர்தல் திருத்தம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

சம்பந்தமான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 120 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக குறித்த சட்டமூலத்திற்காக தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளின் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு ஏதுவான 20ஆம் திருத்தச் சட்டமூலம் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி ஏற்படவில்லை

wpengine

இலங்கை தமிழர் போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wpengine

ரவூப் ஹக்கீமின் போலியான அரசியலும்,செயற்பாடும்

wpengine