பிரதான செய்திகள்

தேர்தல் தாமதமடைந்தால் சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் மேலும் காலதாமதமடையுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டு, இந்த விடயம் குறித்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சார்பாக செயற்படவில்லை என்று உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக வௌியான செய்திகள் குறித்து அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Related posts

மேக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

wpengine

மேலும் 3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்

wpengine

வவுனியாவில் பதிவுசெய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Editor