பிரதான செய்திகள்

தேர்தல்லை நடாத்த ஆணைக்குழு தயார்! ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்பாளர்களுக்கு

இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றும் தேர்தலுக்கு தேவையான  வசதிகளை செய்து கொடுக்க ஆணையம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளை ஒழுங்கமைக்க சிறிது காலம் எடுக்கும். தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்பாளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், அது தோராயமாக மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கத் தயார்: ரத்ன தேரர்

wpengine

யாழ்ப்பாண கனியவளத்துறை அதிகாரியின் ஊழல்

wpengine

கெஜ்ரிவாலை படுகொலை செய்யப் போகிறோம். முடிந்தால் அவரை காப்பாற்றி கொள்ளுங்கள்

wpengine