அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளது – பெப்ரல் அமைப்பு !

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக 20 முறைப்பாடுகளும், தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வமும் குறைவாக இருப்பதாக PAFFREL கண்காணிப்பாளர்களும் தமக்குத் தெரிவித்ததாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல்கள் பணிகளுக்காக சுமார் 4,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்குகளிப்புகளை கண்காணிக்க 200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

புனானை சந்தியில் விபத்து! கர்ப்பிணி பெண் மரணம்.

wpengine

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார்

wpengine

மன்னாரில் பல லச்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா,மஞ்சள்

wpengine