அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தேர்தலுடன் தொடர்பில் இதுவரை 54 வேட்பாளர்களும், 204 சந்தேக நபர்களும் கைது!

(மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 05 ஆம் திகதி) வரை தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய  ஏனைய குற்றங்கள் தொடர்பில் இதுவரை 54 வேட்பாளர்களும் 204 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 08 வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  கடந்த 24 மணித்தியாலத்திற்குள் (நேற்று ஞாயிற்றுகிழமை (04) காலை 06.00 மணி முதல் இன்று திங்கட்கிழமை (05) காலை 06.00 மணி வரை) 5 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 46 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

Related posts

மன்னார் காற்றாலை! கட்டுப்பாட்டு விலை தொடர்பாக ஆலோசனை

wpengine

புலிகளின் சுதந்திரத்திற்காக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் முக்கியத்துவம்

wpengine

சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது

wpengine