தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத்தேர்தலுக்காக புதிய திகதியை அறிவிக்கவுள்ளது.
ஏற்கனவே ஜூன் 20ம் திகதியில் தேர்தலை நடத்தமுடியாது என்று தாம் சட்டத்தரணிகளின் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் சட்ட சிக்கல்கள் இல்லையெனில் பொதுத்தேர்தலுக்கான புதிய தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்று அவர் விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் எண்ணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கான ஆரம்பப்பணிகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சுகாதார பிரச்சனைக்காரணமாக இறுதி தயார்நிலைக்கு காலம் தேவைப்படும் என்றும் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஒழுங்குவிதிக்க ஏற்கனவே தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்