பிரதான செய்திகள்

தேர்தலுக்கான வேட்புமனு கோருவதற்கான நடவடிக்கை

உள்ளுராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவிக்கப்பட்டள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு கோருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.

ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம். எம். மொகமட்  குறிப்பிட்டார்.

எதிர்வரும் 27 ஆரம்பமாகின்ற வாரநாட்களில் வேட்புமனு கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்டுமனு கோரப்பட்ட தினத்தில் இருந்து இரண்டு வார காலம் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தயாரிப்பு பணிகளுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ள அதேவேளை, வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக மூன்றரை நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என மேலதிக ஆணையாளர் குறிப்பிட்டார்.
இந்த செயற்பாடுகளுக்கு அமைய உள்ளுராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான, உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது.

இதற்கமைய நுவரெலியா பிரதேச சபை அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை ஆகிய மூன்று பிரதேச சபைகளாகவும், அம்பகமுவ பிரதேச சபை மஸ்கெலியா மற்றும் நோர்வூட் ஆகிய மூன்று பிரதேச சபைகளாக அதிகரிக்க கடந்த மாதம் 31 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த முதலாம் திகதி கையொப்பமிட்டிருந்தார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், குறித்து ஆறு பிரதேச சபைகளின் எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான விவாரங்கள் இந்த குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, மஸ்கெலியா பிரதேச சபையின் நிருவாக எல்லைகளாக வடக்கே அம்பகமுவ பிரதேச சபை மற்றும் நோர்வுட் பிரதேச சபையும், கிழக்கே நோர்வுட் பிரதேச சபையும்இ தெற்கே இரத்தினபுரி மாவட்டமும், மேற்கே இரத்தினபுரி மாவட்டம் மற்றும் கேகாலை மாவட்டம் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

மஸகெலியா பிரதேச சபை தேர்ந்தெடுக்கப்படவேண்டிய உறுப்பினர்கள் 10பேர், தெரிந்தனுப்பப்படவேண்டிய உறுப்பினர்கள் 6 பேர் என 16 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.
இதேவேளை, நோர்வுட் பிரதேச சபையின் நிருவாக எல்லைகள் வடக்கே அம்பகமுவ பிரதேச சபை, ஹட்டன் நகர சபை மற்றும் கொட்டகல பிரதேச சபை என்பனவம், கிழக்கே அக்கரப்பத்தனை பிரதேச சபையும், தெற்கே பதுளை மாவட்டம் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையும், மேற்கே மஸ்கெலியா பிரதேச சபை நிர்வாக எல்லைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நோர்வுட் பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டிய உறுப்பினர்கள் 12 பேரும்இ தெரிந்தனுப்பப்படவேண்டிய உறுப்பினர்கள் 8 பேர் என மொத்தமாக 20 உறுப்பினரகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபையின் நிருவாக எல்லைகளாக வடக்கே கண்டி மாவட்டமும், கிழக்கே : கண்டி மாவட்டம், கொட்டகல பிரதேச சபை மற்றும் நோர்வுட் பிரதேச சபையும், தெற்கே நோர்வுட் பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையும், மேற்கே கேகாலை மாவட்டமும் எல்லைகளாக நிர்ணயம் செயயப்பட்டுள்ளன.

அம்பகமுவ பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டிய உறுப்பினர்கள் 18 பேரும், தெரிந்தனுப்பப்படவேண்டிய உறுப்பினர்கள் 8 பேரும் என மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 என குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் நிருவாக எல்லைகள் வடக்கே கொட்டகலை பிரதேச சபையும் கிழக்கே : நுவரெலியா பிரதேச சபையும் தெற்கே : நுவரெலியா பிரதேச சபை மற்றும் நோர்வுட் பிரதேச சபையும் மேற்கே நோர்வுட் பிரதேச சபையும் எல்லைகளாக வகுக்கப்பட்டுள்ளன.

அகரபத்தனை பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டிய உறுப்பினர்கள் 9பேரும், தெரிந்தனுப்பப்படவேண்டிய உறுப்பினர்கள் 6 பேரும் என மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொட்டகலை பிரதேச சபையின் நிருவாக எல்லைகளாக வடக்கே திஸ்பனே பிரதேச சபை மற்றும் கொத்மலை பிரதேச சபையும், கிழக்கே நுரெலியா பிரதேச சபை மற்றும் அம்பகமுவ பிரதேச சபையும், தெற்கே அக்கரப்பத்தனை பிரதேச சபை மற்றும் நோர்வுட் பிரதேச சபையும், மேற்கே அம்பகமுவ பிரதேச சபை மற்றும் கண்டி மாவட்டமும் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

கொட்டகலை பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டிய உறுப்பினர்கள் 10பேரும் தெரிந்தனுப்பப்படவேண்டிய உறுப்பினர்கள் 6 பேரும் என மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச சபையின் நிருவாக எல்லைகளாக வடக்கே கொத்மலை பிரதேச சபை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேச சபையும், கிழக்கே றாகலை பிரதேச சபை மற்றும் பதுளை மாவட்டமும், தெற்க பதுளை மாவட்டமும், மேற்கே அக்கரப்பத்தனை பிரதேச சபை மற்றும் கொட்டகலை பிரதேச சபையும் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டிய உறுப்பினர்கள் 14 பேரும், தெரிந்தனுப்பப்படவேண்டிய உறுப்பினர்கள் 9 பேரும் என மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது

wpengine

சோமவன்ச அமரசிங்க காலமானார்

wpengine

யாழில் தொற்று இல்லாதவர்களின் கடைகளைத் திறக்க அனுமதி!

Editor