இலங்கைக்கு தேனிலவுக்காக வந்திருந்த ரஷ்ய நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 38 வயதான ரஷ்ய நாட்டவர் என்பதுடன் அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக இலங்கைக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிர்காப்பாளர்கள் அவரைக் காப்பாற்ற முயன்ற போதும், அது தோல்வியில் முடிந்துள்ளது.
கடலுக்கு அடியில் ஒரு பாறையில் சிக்கியிருந்த நிலையில், மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த ரஷ்ய நாட்டவரின் சடலம் நேற் (21) இரவு பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று(22) பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.