Breaking
Thu. Nov 21st, 2024

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார்நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தேசிய ஷூரா சபை நாட்டின் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துரைகளை இன்று (31) மதியம் சமர்ப்பித்துள்ளது.

கொழும்பு விசும்பாயாவில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள்யோசனைகளைப் பெறும் குழு செயலகத்தில் வைத்து அதன் தலைவர் லால் விஜய நாயக்கவிடம் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துரைகளை கையளித்துள்ளது.IMG_5488

இவ் அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத்,பொதுச்செயலாளர் சட்டத்தரணி மாஸ் எல். யூஸுப், கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் மற்றும் நியாஸ் எம். அபூபக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.IMG_5463

அனைத்து பிரஜைகளுக்கும் ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்த, சகவாழ்வு மற்றும் தேசியநல்லிணக்கத்தை ஊக்குவித்தல், நாட்டு மக்களின் சுதந்திரத்தையும், அடிப்படை உரிமைகளையும்உத்தரவாதப்படுத்தல், சுதந்திரம், அடிப்படை உரிமை மீறல்களுக்கான பரிகாரங்களை வழுப்படுத்தல்,பொறுப்புக் கூறல் மற்றும் நம்பிக்கையான ஆட்சியினை உறுதிப்படுத்தல், இலங்கை ஒரு ஒற்றையாட்சிநாடக இருத்தல், இலங்கையின் மாகாணங்கள் ஒன்பது மாகாணங்களாக இருத்தல், எல்லா மக்களுக்கும் சமமான அதிகாரப் பகிர்வை வழங்குதல், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை உருதிப்படுத்தும்வகையில் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளுதல் என்பன தேசிய ஷூரா சபை சமர்பித்த புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான முன்மொழிவு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதன்தலைவர் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *