செய்திகள்பிரதான செய்திகள்

தேசிய விலங்கு கணக்கெடுப்பு நிறைவடைந்தது….!!!

தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று (15) காலை 8 மணிக்கும் ஆரம்பித்து 8.05க்கு நிறைவடைந்தது.

தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடம் வரையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்திருந்தது.

அதன்படி, காலை 8:00 மணி முதல் 8:05 மணி வரை, ஒருவர் தனது தோட்டம், சாகுபடி நிலம், புனித இடங்கள் மற்றும் பிற பொது இடங்களை 5 நிமிடங்கள் கண்காணித்து, அந்த நேரத்தில் வளாகத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள், மர அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து , கணக்கெடுப்பு தாளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.

Related posts

சாய்ந்தமருது வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி அரசியல் ஆதாயங்களுக்காக தடுக்கப்பட்டுள்ளது ஏன்?

wpengine

மன்னார் மாந்தை இரட்டை மாட்டு வண்டி சவாரி

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் கொழும்பு விஜயம் 27ஆம் திகதி

wpengine