பிரதான செய்திகள்

தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்காமல் பௌத்த மதகுரு செயற்பட்டார்.

நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்குடா தேர்தல் தொகுதிகளிலும் இடம்பெற்ற நிகழ்வுகளில் தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்காமல் பௌத்த மதகுரு செயற்பட்டார்.


இதன் அடிப்படையில் வாழைச்சேனை பிரதான வீதியில் வாழைச்சேனை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு மற்றும் ஓட்டமாவடி பிரதான வீதியில் சுதந்திர ஊடக மையத்தின் கல்குடா கிளையினால் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்காமல் பௌத்த மதகுரு செயற்பட்டார்.

குறித்த வாழைச்சேனை மங்களராம விகாரையின் விகாராதிபதி அத்துல தம்ம தேரோ சுதந்திர தின நிகழ்வின் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமை செயற்பட்டமை கலந்து கொண்டவர்களை வியப்பில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடக மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.எம்.மர்சூக் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட்டதுடன், வர்த்தக சங்கத் தலைவர் ஏ.ஐயூப் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது.

குறித்த நிகழ்வுகளில் மதப் பெரியார்கள், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜெயசுந்தர, பொலிஸார், பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், வர்த்த சங்கத்தினர், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

வவுனியா வர்த்தக சங்கம் வேண்டுகோள்

wpengine

முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே ஒரு ஊடகமாக இருந்த UTV இற்கு நடந்தது என்ன? பசிலுக்கு விற்கப்பட்டதா ? UTV இழுத்து மூடப்பட்டதா?

wpengine

ஆலய ஒலிபெருக்கிகளை யாருக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் பயன்படுத்துங்கள்.

Maash