தேசிய உடல் ஆரோக்கிய உடல் விருத்தி விஷேட தினத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று (06) காலை 8. 00 மணியளவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது பிரதேச செயலக வீரர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
இந்த போட்டியில் 1ம் இடம்பெற்ற திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.இஸ்ஸதீன், மற்றும் 2ம் இடம்பெற்ற முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.எம்.ஜிப்ரி, மற்றும் 3ம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித் ஆகியோருக்கு பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
