உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்

இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் விமர்சனப் பார்வைக்குள் சிக்குண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் வகிபாகம் குறித்த பார்வை காலத்தின் கட்டாயமாகத் திகழ்கின்றது.

இளம்வயதில் அரசியல் பிரவேசமும், துடிப்பான செயற்பாடுகளுடனும் பயணிக்கும் அமைச்சர் றிஷாதின் மீதான மக்களின் கவனக்குவிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் கட்சி பேசும் பொருளாக மற்றமடைய பிரதான காரணமாகும்.
அறிமுகம்
புலிப் பயங்கரவாதிகளின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் அகதிவாழ்வு, மீள்குடியேற்றம், வறுமை, தொழில்வாய்ப்பு, தாயகமீட்பு என்ற சுலோகங்களுடனான றிஷாதின் அரசியல் பிரவேசம் இவருக்கான தனித்துவ அடையாளத்தை பிரதிபலித்தது.

றிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சுலோகமான உரிமை – அபிவிருத்தி, அரசியலுக்கு எதிரான முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் அசமந்தப்போக்கே இவரின் கட்சி மாற்றத்திற்கான அடிப்படை காரணியாக அவதானிக்க முடிகிறது.

சிறுவயதிலேயே அரசியலில் அவ்வப்போது தீர்க்கமான முடிவுகளை எடுத்து சிறப்பான காய்நகர்த்தல்களை மேற்கொண்டதனாலேயே தனியான கட்சியொன்றை உருவாக்க வாய்ப்பாகியது.
செயலூக்கமுள்ள தலைமைத்துவத்தை தேடி அலைந்த, தேடலோடு அலைந்த சமூகத்திற்கு அவரின் ஊக்கமும், பாராட்டும் ஏனைய முஸ்லிம் தலைமைகளை ஆட்டம் காண வைத்தது. 2005ல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற பெயர் நாமத்துடன் விருட்சமடையத் தொடங்கியது.

கட்சியின் நோக்கம்

நாட்டில் வாழும் சகல மக்களும் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதோடு தங்களின் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் தாராளமாக அனுபவித்து வாழ வழிசெய்தல்.
சிறப்பான கல்விச் சமூகம்,தன்னிறைவான வாழ்க்கை, சிறப்பான அபிவிருத்தி நீதி தர்மத்தை நிலைநாட்ட களப்பணி செய்தல் போன்ற சமூகத்துடன், உயிர்த்துடிப்பான ஒவ்வொரு பகுதிகளையும் ஒத்துணர்ந்து தேவைக்கேற்ப உதவுதல் இதுவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தாரக மந்திரமாகும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்
2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி படிப்படியாக சமூக அங்கீகாரத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மூன்று உள்ளுராட்சி மன்றங்களும் பல உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை தம் வசம் வைத்திருந்து குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கட்சியி;ன் தலைவர், தவிசாளர், செயலாளர் போன்றோரின் கடின உழைப்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவுடன் ஐந்து பராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் பயணம் தொடர்கிறது.

தேசியப்பட்டியல் முரண்பாட்டின் காரணமாக கட்சி செயலாளரின் வெளிநடப்பும், கட்சிக்கும் தலைமைக்கும் சேறு பூசும் முகமாக தொழிற்படும் அவரின் சுயநல செயற்பாட்டையும் தாண்டி கட்சியின் பயணம் அலாதியானது.

நடைபெற இருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் சனத்தொகை கூடிய பிரதேசத்தில் மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் நேரடியாகவே களம் இறங்கியுள்ளது.

இதன் நோக்கம்:

நாட்டின் தலைமைகளுடன் உரிமைக்காகப் பேரம் பேசும் சக்தியாக எம்மை வளப்படுத்திக் கொள்வது.

மயில் சின்னத்தில் 35 தொகுதிகளில் தனித்து களமிறங்கியுள்ளது. மயிலில் போட்டியிடும் இடங்களிலெல்லாம் முஸ்லிம்களின் உரிமை, தனித்துவம், உடைமை, எதிர்காலம் சார்ந்த பல சாத்வீகப் போராட்டத்திற்கான முன்னெடுப்பாகும்.

இப்பகுதிகளில் “மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி” எனும் சுலோகத்தோடு வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

மயிலில் போட்டியிடும் பிரதேசத்தில் கண்டி மாவட்டம் புதுமையானது ஏனெனில் இங்கே அதிகமான மாற்று மத, மொழி பேசுகின்ற வேட்பாளர்கள் களமிறங்கப்பட்டு ஓர் இனத்திற்குச் சொந்தமானது அல்ல என மீண்டுமொரு மக்கள் காங்கிரஸ் நரூபித்துள்ளது.

மயில் தனித்துப் போட்டியிடும் பிரதேசங்களில் மக்கள் காங்கிரஸின் பேசும் பொருளாகத் திகழ்வது:

• கல்வி
• எல்லை நிர்ணயம்
• குடி நீர்ப்பிரச்சினை
• நீர்ப் பாசனம்
• சுகாதாரம்
• சுயதொழில்
• உட்கட்டமைப்பு
• தனித்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு போன்ற அடிப்படைகளை மையக் கருவியாகக் கொண்டு போட்டி இடுகின்றது.அரசியல் கூட்டு
40 தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டி இடுகின்றது.

அதிகமாக தமிழ் இனத்தவர்கள் வாழும் பிரதேசத்திலும், மாற்று சமூகங்களுடன் இன ஐக்கயத்தைப் பேணும் அடிப்படையிலும், எம் உரிமைகளை உரிமையோடு பேசும் எதிர்பார்ப்பிலும் களம் இறங்கியுள்ளோம்.
இப்பிரதேசங்களில்:

• தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் மீள்குடியேற்றம்
• கல்வி
• காணப்பிரச்சினைகள்
• நீர்ப்பாசனம்
• அடிப்படை வசதிகளை மேம்படுத்தல்
• உட்கட்டமைப்:பு அபிவிருத்தி
• வேளாண்மை பயிர்ச்செய்கை
• வரட்சிகால வருமானத்திட்டம்
• நகரத்திட்டமிடல்கள் போன்ற முக்கிய விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு பிரசாரமும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது.

மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியுடன் கைகோர்த்துப் பயணிக்கும் மக்கள் காங்கிரஸ் நீண்டகால அரசியல் பயணத்தைத் தொடர்ந்த பல அரசியல் கட்சிகளைவிட அபிவிருத்தச் செயற்பாடுகள் ஊடாக மக்கள் மனங்களில் தேசிய காலத்தில் முன்னிலை பெறுவது சிறப்பம்சமாகும்.

மக்கள் காங்கிரஸ் கையிலெடுத்த சுலோகங்களும், பிரச்சாரப்பொருளும் நடைமுறைப்படுத்தக் கொண்டிருக்கும் விடயங்களாகும். சாத்தியமில்லாத வறிகளில் காலவிரயம் என்பது மக்கள் காங்கிரஸின் அகராதியில் இல்லாத அம்சமாகும். இத்தேர்தல் ஊடாக துரித அபிவிருத்தி , சிறப்பான சமூகக் கூட்டமைப்பு, உரிமைக்காக
குரல் கொடுக்க வலுவான மக்கள் அங்கீகாரம், பிரதேச உட்கட்டமைப்பு சமூக நலன் தாபனங்களை ஒன்றிணைத்தல், மக்களின் குரலுக்கே செவிசாய்த்தல், பெண்கள் சிறுவர் நலன் பேணல் போன்ற விடயங்களை முன்னிறுத்தி களம் கட்டிருக்கும் துடிப்பான தலைமையுடன் கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரித்து உங்கள் பெறுமதியான வாக்கை அழிப்பதன் மூலம் தரமான சமூகத் தொண்டு செய்யுங்கள்.
‘மாற்றத்திற்கான மக்கள் எழுச்சி’

தகவல் : மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புப் பிரிவு

Related posts

விளையாட்டு மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்! (கடைசி நிமிட வீடியோ)

wpengine

Colombo D.S. Senayake College celeberated Internationl Mother Language Day – chief guest state minster education Ratha krishnan

wpengine

அவதானம்! அரச நிறுவன சின்னங்களைப் பயன்படுத்தி வேலை தருவதாக தரவு சேகரிப்பு மற்றும் பண மோசடி.

Maash