Breaking
Sun. Nov 24th, 2024

அன்புள்ள நபீர்பவுன்டேசன் தலைவரே!

அடிக்கடி அறிக்கைவிடும் உங்களது செயற்பாடுகள் உலமாக்கட்சித் தலைவரைத் தான் ஞாபகப்படுத்துகிறது.இருந்தும் உங்களது கிழக்கு தேசியப்பட்டியல் தொடர்பான அறிக்கையில் நிசாம் காரியப்பருக்கு வழங்க வேண்டும் என தெறிவித்திருந்தீர்கள் .

இந்த சமூகத்திற்கும் SLMC கட்சிக்கும் நிசாம் காரியப்பர் எப்போது அறிமுகமானார்,எத்தகைய அர்ப்பணிப்புச் செய்தார் என்பதை பட்டியலிட்டுக் கூறமுடியுமா?

கல்முனை மற்றும் கொழும்பைத் தவிர நாட்டின் ஏதாவது பிரதேசங்களுக்குச் சென்று கட்சியின் பிரச்சாரம் மற்றும் மறுசீரமைப்புகளில் பங்கெடுத்தாரா?இவரைவிட ஆயிரம் மடங்கு பிரதிமேயர் முழக்க மஜீது கட்சிக்கான போராளியாகவும்,உண்மையாகவும் உள்ளார்.

SLMC ஐப் பொறுத்தவரையில் பொதுச் செயலாளர் பதவி எப்போதும் தலையாட்டும் பொம்மையே.இருந்தும் ஹஸனலி கட்சியின் ஆரம்பகாலப் போராளியாகவும்,விசுவாசியாகவும் இருந்ததால் தேசியப்பட்டியல் வழங்கப்பட்டத.நிசாம்காரியப்பர் கட்சியின் போராளியாகவோ,கட்சிக்கு விசுவாசியாகவோ இருந்தது கல்முனை நகரசபை தேர்தலுக்குப் பின்னர் என்பதே உண்மை.

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிழக்கில் உயிர்களைத் தியாகம் செய்து போராளிகள் கட்சி வளர்த்தனர்.அந்த நேரம் ஆங்கிலம் பேசி கொழும்பில் வாழ்ந்தவர் நிசாம்.

2002ம் ஆண்டு காலப்பகுதியில் சந்திரிக்கா மற்றும் ரணிலால் கட்சி பலகோணங்களில் உடைக்கப்பட்டது.அந்தநேரம் பேரியல் அஷ்ரபுடன் துணைநின்று கட்சிக்கும் போராளிகளுக்கும் துரோகம் செய்தது யார்.?

ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் தேசியப்பட்டியல் வழங்குவது நியாயம் என்றால்,கிழக்கில எத்தனையோ கலாநிதி மற்றும் கல்விமான்கள் உள்ளனர்.இவர்கள் சமூகத்திற்காக பல்துறைசார் அர்ப்பணிப்புகளைச் செய்கின்றனர்.நிசாம் காரியப்பர் கிழக்கு முஸறலீம்களின் குடியேற்றம்,காணிப்பிரச்சனை,பௌத்த தீவிரவாதம் மற்றும் வடகிழக்கு இணைப்பு தொடர்பில் குறைந் பட்சம் தனக்குத் தெறிந்த சட்டத்தையாவது வாய்திறந்தாரா?

தற்போது ஹகீமுடன் சேர்ந்துள்ள புதிய கூட்டாளி சுமேந்திரனுக்கு ஆமா போடுபவரே நிசாம்.ஒரு கல்விமானாக இவரை மதிக்கின்றோம் பராட்டுகிறோம்.ஆனால் சமூகத்தை வழிநடாத்தும் தேசியப்பட்டியலுக்கு அருகதையற்றவர்.

ஏற்கனவே கல்முனை,சாய்ந்தமருது,நிந்தவுர் தொடர்ச்சியாக பாராளுமன்ற ஆசனங்களை அடைந்துள்ளது.ஆகவே கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத இடங்களுக்கு வழங்க வேண்டிய கடப்பாடு உள்ளது.அறிக்கை விடவேண்டும் என்பதற்காக எதையும் பேசமுடியாது.SLMC கல்முனைக்குரிய கட்சியல்ல,முஸ்லீம்களின் கட்சி.

இத்தகைய அறிக்கை விடுவதைவிட உங்களுக்கே தேசியப்பட்டியலை கேட்டிருக்கலாமே?கிழக்கில் அதிகமானவர்கள் அறிக்கை விடுவதற்கு சில இணையத்தளங்களை சொந்தமாக்கி உள்ளனர்.

மேலும் ஏற்கனவே பிரதிநிதித்துவம் இருந்து ,,தற்போது கிடைக்கப் பெறாது ACMCன் அதிகாரத்திற்கு உள்ளான புத்தனம் மற்றும் வன்னி கட்சிக்கு முக்கியமாக உள்ளது.இந்தப் பிரதேசத்தில் கட்சியை ஏனைய இடங்களைவிட ACMC மற்றும் PA முஸ்லீம் வாக்காளர்களுக்கு மத்தியில் பலப்படுத்த வேண்டிய கடமை கட்சிக்கு உண்டு.

அத்துடன் கட்சியின் உயர்பீடத்தைக் கூட்டாமல் பொதுச் செயலாளராக நிமித்தது இரண்டு காரணங்கள்:
1-ரணில் மற்றும் சுமேந்திரனின் நிர்ப்பந்தம்.இதன்மூலம் கிழக்கை இணைக்கும் சதித்திட்டத்தின் ஒருபகுதி
2-பிரதிஅமைச்சர் ஹரீஸுக்கு கட்சியிலும் கிழக்கிலும் உருவாகியுள்ள ஆதரவை தடுக்க கல்முனையில் தேவைப்பட்ட தலையாட்டு பொம்மை.

ஆகவே நிசாம் காரியப்பரை கிழக்கில் தேசியப்பட்டியல் வழங்குமாறு ஒருபோராளிகூட யோசிக்க மாட்டான்.உங்கள் சுயவிளம்பரத்துக்காக இப்படியான காமெடி அறிக்கையை விடவேண்டாம்.

அடுத்து கிழக்கில் வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் திருகோணமலைக்கு கௌரவ தௌபீக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.அதனை திரும்பப் பெற்று வழங்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.

கட்சிக்கும் தலமைக்கும் விசுவாசமாக இருக்கின்ற ஒரு போராளி தௌபீக் மட்டுமே.தலமையின் கட்டளையை மீறாது கூட்டுப் பொறுப்புடன் செயற்படுகின்ற ஒரு மக்கள் பிரதிநிதி.உங்களிடம் இருந்திருந்தால் பறித்து இவருக்கு வழங்க வேண்டுமே தவிர இவரிடமிருந்து உங்களுக்கு வழங்குவது கோழைத்தனம்.இதனை கட்சியின் அடிமட்ட போராளிகூட விரும்பமாட்டான்.

கிழக்கில் வழங்கப்பட்ட பசீர் மற்றும் ஹஸனலி போன்றவர்களின் தேசியப்பட்டியல் தனிப்பட்ட விருப்பில் தவறுதலாக நடந்த வரலாற்றுத் தவறுகள்.ஆனால் தௌபீக்கின் தேசியப்பட்டியல் நியாயமாகவும்,நேர்மையாகவும் கட்சிக்குரிய தார்மீகப் பொறுப்பில் வழங்கப்பட்டவை.

SLMC கட்சியில் அடிப்படை உறுப்புரிமைகூட இல்லாத உங்களால், பொறுப்பும் பெறுமதியுமிக்க இந்தப் பதவி தொடர்பில் அறிக்கைவிட உள்அர்த்தம் என்ன?உங்கள் கருத்தை ஒரு உண்மையான போராளியால் கூட ஐஈரணிக்க முடியாது.SLMC தையல்இயந்திரம் மற்றும் பாடசாளை உபகரணம் வழங்கி உருவாக்கிய கட்சியல்ல.உங்கள் மாவட்டத்தைவிட பல உயிர்களை இழந்து,அகதிகளாகி,உடமை இழந்து வளர்த்த கட்சி.அஷ்ரப் உங்கள் மாவட்டத்தில் உருவாக்கி இருக்கலாம்.அதற்கு இரத்தத்தால் உரமூட்டி வளர்த்தது திருகோணமலை மாவட்ட முஸ்லீம்கள் என்பதே வரலாறு.

நீங்கள் எங்களிடம் இருந்து திருப்பி எடுப்பதற்கு அறிக்கை விடுவதைவிட ,வழங்கியதை தரமாட்டோம் என்று அடம்பிடுக்கும் தார்மீகக்கடமை எமது மாவட்டத்தற்கு உண்டு.இருந்தும் எமது மவட்ட SLMC தலமையும் போராளிகளும் கட்சிக்கு தலை வணங்குபவர்கள்.எங்கள் கண்ணியத்தையும் கட்டுப்பாடுகளையும் உங்கள் சில்லறைத்தன அறிக்கைகளுக்காக தவறாக வழிநடாத்த ஒருபோதும் விடமாட்டோம்.

2000ம் ஆண்டுவரை பிரதிநிதித்துவம் இல்லாது இருந்த கட்சியை 15588வாக்குகளுடன் பாராளுமன்ற ஆசனத்தை சுவீகரிக்கச் செய்தார்.அதன் பின்னரான பல மாகாண மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றதோடு 2010 தேர்தலில் அதிகூடிய 23588வாக்குகளை மாவட்டத்தில் பெறுவதற்கு காரணமாக இருந்தார்.

கிழக்கில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய சேவைகளைச் செய்து பல சவால்களுக்கு மத்தியில் கட்சியை வளர்க்கின்ற தௌபீக்கிடம் இருந்து தேசியப்பட்டியல் மீளெடுக்கப்படுவது கட்சியின் எதிர்காலத்திற்கு பாரிய சவாலாகவும் தோல்வியாகவும் அமையும்.

குறிப்பாக ஐதேக மற்றும் ACMCன் பாராளுமன்ற பிரதிநிதிகள் SLFPன் மாகாணசபை முஸ்லீம் பிரதிநிதிகளுக்கு மத்தியில் ஏனைய மாவட்டங்களைவிட கட்சியை பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தௌபீக்கிற்கு உள்ளது.இதற்கு இருக்கின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவமே துணையாக உள்ளது.

மேலும் கிழக்குமாகாணசபை திருகோணமலை மாவட்டத்திற்கு செய் துரோகங்களால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.அத்துடன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மூதூருக்கான வேட்பாளர் விடயத்தில் கட்சித் தலமையின் பிழையான செயற்பாட்டால் கட்சியின் கோட்டையான மூதூரில் சரிவினைக் கண்டுள்ளது.இவற்றை ஓரளவேனும் சமாளித்துக் கொள்ள திருகோணமலை மாவட்ட தேசியப்பட்டியல் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும்.

இம்முறை தேசியப்பட்டியல் வழங்கப்படாது விட்டிருந்தால் எதர்வரும் காலங்களில் மாவட்டத்தில் 1000வாக்குகளைப் பெறுவது கூட கடினமாக இருக்கும்.

3பாராளுன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு மேலதிகமானது.ஏனெனில் தனிநபராக அஷ்ரப் செய்தவகைகளில் 50% கூட 3 உறுப்பினர்களால் செய்ய முடியவில்லை.போதாக் குறைக்கு 4வது நிசாம் காரியப்பருக்கு வழங்குவது நேரத்தை வீணடிக்கும் ஒன்றாகும்.

அதேநேரம் மற்றவர்களைப் போலன்றி கௌரவ தௌபீக் அவர்கள் கட்சித்தலமை வேண்டினால் பதவியை இராஜினாமாச் செய்யத் தயாராகவே உள்ளார்.அப்படி நடந்தால் இததற்கான பதலீடு புத்தளம்,குருணாகல் அல்லது வன்னிக்கே வழங்கப்பட வேண்டும்.

மாறாக கட்சித்தலமை தனது மன இச்சைக்கு நிசாம் காரியப்பர் போன்றவர்களுக்கு வழங்கினால்,கட்சியின் படுதோல்விக்கு தயாராக வேண்டும்.

குறிப்பு::இந்தக்கட்டுரை கட்சித்தலமை மீதோ,கௌரவ தௌபீக் மீதோ உள்ள ஈடுபாட்டால் எழுதவில்லை.ஏனெனில் பலமுரண்பாடுகள்,கருத்து எதிர்மறை உள்ளவன்.திருகோணமலை மாவட்ட முஸ்லீம் பிரதிநிதித்துவத்தின் மீதுள்ள அதீத அக்கரையுடன் கூடிய கட்சித் தலமைக்கான ஆலோசனையாகவே எழுதியுள்ளேன்.

Fahmy Mohamed-UK
Tel:00447870763570
திருமலை சகோதரத்துவ அமைப்பு

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *