பிரதான செய்திகள்

தேசியப்பட்டியல் பிரச்சினை அத்துரலேயே – ஞானசாரர் மோதல்

எங்கள் சக்தி மக்கள் கட்சியின் சார்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தமது பெயரை குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்ட கடிதம் சட்டபூர்வமானது என அந்த கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.


அதனை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக எங்கள் சக்தி மக்கள் கட்சி கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்படாத போதும் கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.


இதன்பின்னர் அந்த ஆசனத்துக்கு பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


எனினும் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரருக்கும், ஞானசார தேரருக்கும் இடையில் இது தொடர்பில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக செயலாளரான வெடினிகம தேரர் குறிப்பிடுகிறார்.


இதனையடுத்தே தாம் தேசியப்பட்டியல் உறுப்பினரான தமது பெயரை குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அது உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெடினிகம தேரர் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து உயிரச்சுறுத்தல் காரணமதாக தாம் தற்போது மறைந்து வாழ்கின்ற நிலையில் மற்றும் ஒருவரை பெயரிட்டு கட்சியின் தேசியப்பட்டியல் நிரப்பப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.


எனவே அத்துரலேயே – ஞானசாரர் மோதல் நிறைவுக்கு வந்த பின்னர் தாம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை மீண்டும் கட்சியிடம் கையளிக்கத் தயார் என்றும் மறைந்திருக்கும் வெடினிகம தேரர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

முசலி வர்த்தகமானி அறிவித்தல்! மீண்டும் வருகை தரும் ஜனாதிபதி ஆணைக்குழு

wpengine

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

wpengine

வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமை! மரண தண்டனை டிரம்ப் கோரிக்கை

wpengine