பிரதான செய்திகள்

தேங்காயின் விலையினை கேட்டு ஒடிய முதியோர்

யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் சந்தைகளிலும் தேங்காயின் வரத்து வெகுவாகக் குறைவடைந்து காணப்படுகிறது.
தேங்காய் விலை அதிகரிப்பால் பல வர்த்தக நிலையங்கள் தேங்காய் விற்பனையைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.

இவ்வாறான சூழலில் இன்றைய தினம் அனுராதபுரம் சிறைச்சாலையில்உண்ணாவிரதமிருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும் யாழில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குப்பிளான் தெற்குப் பகுதியில் கடந்த பல வருடங்களாகத் தேங்காய் வியாபாரம் மேற்கொண்டு வரும் வீடொன்றுக்கு அருகிலுள்ள கிராமமொன்றிலிருந்து இன்று காலை தேங்காய் கொள்வனவு செய்வதற்காக முதியவரொருவர் சென்றுள்ளார்.

ஒரு தேங்காயின் விலை என்ன? எனக் குறித்த முதியவர் வினாவிய போது 80 ரூபா என தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வரும் வீட்டின் எஜமானி பதிலளித்துள்ளார்.

விலை கேட்டு அதிர்ச்சியடைந்த குறித்த முதியவர் பதில் எதுவும் சொல்லாமல் துவிச்சக்கர வண்டியில் அங்கிருந்து தலை தெறிக்க ஓடி விரைவாக மறைந்துள்ளார்.

Related posts

பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் அல்குர்ஆன் சம்பியன் விருதுக்கு விண்ணப்பம் கோரல்

wpengine

சம்பாந்துறையில் 17 வயது யுவதி தற்கொலை

wpengine

“வட்ஆப்“ பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் தகவல்

wpengine