தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

தொலைபேசி மற்றும் பேஸ்புக்கு தடை விதித்த மைத்திரி

அரசாங்க சேவையில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்கள் பணி நேரங்களில் தொலைபேசி மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் காலத்தை வீணடிப்பதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

தொலைபேசிகளில் குறுஞ் செய்திகளை அனுப்புவது, பேஸ்புக் பார்ப்பது தொடர்பில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர். இந்நிலையில் எத்தனை மணி நேரம் சரியாக பணிப்புரிகிறார்கள்.

எந்தவொரு அதிகாரியாக இருந்தாலும் பணிபுரியும் நேரத்தில் பேஸ்புக் பார்த்தார் என எனக்கு புகார் கிடைத்தால் உடனடியாக பணியில் இருந்து நீக்கி விட்டு அதன் பின்னர் தான் குறித்த அதிகாரியிடம் விசாரணை நடத்துவேன்.

பொது மக்களுக்கு வழங்கும் சேவையானது சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் தாமதமடைந்தால் சட்ட நடவடிக்கை

wpengine

முஸம்மிலுக்கு பிணை

wpengine

அரச பணியாளர்களுக்கு கவலையினை கொடுக்க உள்ள அரசாங்கம்

wpengine