பிரதான செய்திகள்

தெலியாகொன்னை பிரதேசத்திற்க்கு நிரந்தரமாக தாய்சேய் நிலையம் அஷார்தீன் மொய்னுதீன்

குருணாகல்நகரின் ஒரே முஸ்லிம் கிராமமான தெலியாகொன்னை கிராமத்திற்க்கு மீண்டும் தாய் சேய் மருத்துவ நிலையத்தை அமைத்துத் தருமாறு அ.இ.ம.கா  மாநகரசபை உருப்பினர் தேஷபன்து அஷார்தீன் மொய்னுதீன் அவரகளினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக மாநகரசபை அமர்வில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ அஷார்தீன் கூடுதலான தாய்மார்கள் சொல்லொனாத் துயரங்களுடன் தனது கிராமத்திலிருந்து நகரை நோக்கி க்லினிக் தேவையைப் பூர்த்தி செய்ய வருவது மிகவும் கவலைக்கிடமானது.

அத்துடன் அவர்கள் முச்சக்கர வண்டியில் வருவார்களேயானால் சுமார் 500/- ரூபாய் அளவில் செலவிட வேண்டியுள்ளது.

வருமைக் கோட்டின் கீழ் வாழும் ஏராளமானோருக்கு இது ஓர் பெரும் சுமை. அத்துடன் அரைநாள் அவ்வேலையிலையே முடிவடைகின்றது.

பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஓர் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இது வரையில் இத் தாய்சேய் மருத்துவ நிலையத்தை வழங்காமல் இருப்பது மிகவும் கவலைக்கிடமான ஓர் விடையமாக உள்ளது. இதற்க்கு முன் பாலர் பாடசாலை கட்டிடத்தில் இயங்கிய போதும் தற்சமையம் இதற்க்கு ஓர் உரிய இடம் இல்லாமல் இருப்பதனால் மாநகரசபை மூலம் உரிய நடவடிக்கை எடுத்து இத்தாய்மார்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய சொந்த கிராமமான தெலியாகொன்னைக்கே மீண்டும் இத்தாய் சேய் நிலையத்தை வழங்குமாறு வேண்டிக்கொண்டார்.

அத்துடன் தான் ஆதரவு வழங்கும் முன்பே இக்கோரிக்கையை முன்வைத்த போதும் தற்சமயம் ஓர் வருடம் நிறைவடைந்திருப்பதையும் ஞாபகமூட்டிக்கொள்வதாகவும் அஷார்தீன் தெரிவித்தார்.

கௌரவ நகரபிதா உட்பட சபை உருப்பினர்கள் அஷார்தீன் அவர்களின் வேண்டுகோளை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

Related posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டம்,பதவிக்காக செயற்பட கூடாது – டெனீஸ்வரன்

wpengine

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!

Editor

விவசாயிகளையும்,நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டும்- ஜனாதிபதி

wpengine