பிரதான செய்திகள்

தெற்காசிய வலயமட்ட போட்டியில் இலங்கைக்கு வெண்கல பதக்கத்தினை பெற்ற கபடி சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுமார் 200 வருடங்கள் மிகவும் பழைமைவாந்த மட்டக்களப்பு தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களான செல்வன் ராசோ பென்சி,செல்வன் அமிர்தலிங்கம் மோகனராஜ் ஆகிய இரு மாணவர்களும் 2011ம் ஆண்டு தொடக்கம் கோட்டமட்டம்,வலயமட்டம்,மாகாண மட்டம்,தேசிய மட்டம் ஆகிய போட்களில் கலந்து கொண்டு புனித வளனார் பாடசாலைக்கு பெருமையையும் தேடிக் கொடுத்துள்ளதுடன் 2016ம் ஆண்டு இலங்கை 20 வயதுக்குட்பட்ட கனிஷ்ட கபடி தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்டு தெற்காசிய வலயமட்ட போட்டியில் முதல் தடவையாக இலங்கைக்கு வெண்கல பதக்கத்தினை பெற்றுத்தந்து பெருமை சேர்த்துள்ளனர்.

மேற்படி இலங்கைக்கு வெண்கல பதக்கத்தினை பெற்ற கபடி சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 12 ஆம் திகதி   வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

புனித வளனார் மகா வித்தியாலய அதிபர் எஸ்.மங்களச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு, அம்பறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை,மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் , உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் லவகுமார் உட்பட கல்விப் பணிப்பாளர்கள்,பாடசாலைகளின் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பொது மக்கள்,புத்தஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.d864a2e1-8daa-4e1d-8cfc-a3119300da34

இதன் போது அதிதிகளினால் கபடி சாதனையாளர்களின் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கபட்டதுடன் கபடி வீரர்களை ஊக்கப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் கே.சத்தியகாந்தன்,கபடி பயிற்றுவிப்பாளர் ஜோர்ச் ஆத்தர் போல் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இலங்கைக்கு வெண்கல பதக்கத்தினை பெற்ற கபடி சாதனையாளர்களான செல்வன் ராசோ பென்சி,செல்வன் அமிர்தலிங்கம் மோகனராஜ் ஆகியோர் பதக்கமும்,விருதும் வழங்கி கௌரவித்தனர்.283f9b91-bed3-4699-a6c0-04c5f351f456

இதில் மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.

இங்கு இலங்கைக்கு வெண்கல பதக்கத்தினை பெற்ற கபடி சாதனையாளரக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பண ஊக்குவிப்பை வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்

wpengine

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

wpengine

தனியான முஸ்லிம் மரண பரிசோதகர்கள் விவகாரம்; வெடித்தது சர்ச்சை!

Editor