Breaking
Sat. Nov 23rd, 2024

ஹஜ் யாத்­தி­ரையின் ஊடாக உல­கெங்­கிலும் உள்ள இஸ்­லா­மி­யர்கள் ஒரே நோக்­கத்­திற்­காக ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து மானிட ஐக்­கி­யத்­தையும் சமூக நல்­லி­ணக்­கத்தின் மேன்­மை­யையும் உல­கிற்கு பறை­சாற்­று­கின்­றனர் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில்   தெரி­வித்­துள்ளார்.

 

அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தொன்மைக் காலங்­களில் இருந்தே மனிதன் சமய நிகழ்­வு­களில் ஒன்று சேர்ந்து ஈடு­ப­டு­வதை மனித வர­லா­றுகள் குறிப்­பி­டு­கின்­றன. பல யுகங்கள் கடந்து இன்று கூட தாம் பின்­பற்றும் சம­யத்­துடன் பிணைந்­துள்ள மனி­தர்கள் தமது சம­யத்­துடன் தனித்­து­வ­மான வணக்க வழ­பாட்டு முறை­களைப் பாது­காப்­ப­தற்கு ஒற்­று­மை­யோடு தம்மை அர்ப்­ப­ணித்­துள்­ளனர்.

ஹஜ் யாத்­தி­ரையின் ஊடாக உல­கெங்­கிலும் உள்ள இலட்­சக்­க­ணக்­கான இஸ்­லா­மி­யர்கள் ஒரே நோக்­கத்­திற்­காக ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து மானிட ஐக்­கி­யத்­தையும் சமூக நல்­லி­ணக்­கத்தின் மேன்­மை­யையும் உல­கிற்கு பறை­சாற்­று­கின்­றனர்.

இறை­வ­னுக்கும் மனி­த­னுக்கும் இடை­யி­லான தெய்­வீகப் பிணைப்பை சிறப்­பாக எடுத்­துக்­காட்டும் இந்த ஹஜ் வணக்­க­மா­னது, மனி­தர்­க­ளுக்கு இடை­யி­லான அனைத்து வேறு­பா­டு­க­ளையும் மறந்து உலகின் நாற்­தி­சை­க­ளிலும் இருந்து வரு­கின்ற அனைத்து மக்­களும் ஒரே வித­மாக இறை­வனை வணங்கும் உயர்ந்த வணக்­க­மாகும்.

பிரி­வினை மட்­டுமே கோலோச்சும் இன்­றைய உலகில் பரஸ்­பர பிணைப்­பையும் தலை­மைத்­து­வத்­திற்கு கட்­டுப்­படும்  போத­னை­க­ளையும் சமூ­க­ம­யப்­ப­டுத்தும் ஹஜ் உல­கிற்கு வழங்கும் உன்­னத செய்தி சமத்­து­வத்தின் மூலம் கட்­டி­யெ­ழுப்­பப்­படும் உயர்ந்த சமூக நீதி­யாகும்.

புனித மக்கா நகரை மைய­மாகக் கொண்டு முழு உல­கிற்கும் விடுக்­கப்­படும் மனி­தர்­க­ளுக்கு இடை­யி­லான சமத்­துவம் குறித்த இந்த உன்­னத செய்­தியை மதித்து ஹஜ் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் யாத்திரிகர்களுக்கும் உலக வாழ் முஸ்லிம் சமூகத்திற்கும் எனது இதயபூர்வமான ஈதுல் அல்ஹா தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *