பிரதான செய்திகள்

தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு!

இடமாற்ற உத்தரவுகளை வழங்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் இல்லை என தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாரா அஜித் ரோஹண அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அதன்படி, அமைச்சின் இடமாற்ற உத்தரவை ஏற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை எனவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 7 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு நேற்று (25) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, இதற்கு எதிரான இந்தக் கடிதத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அரசியலமைப்பின் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் பதவிகளை மாற்றுவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு கோட்டை – யோர்க் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் .

Maash

ரங்காவின் மின்னலும் பின்னலும்

wpengine

விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள்!

wpengine