பிரதான செய்திகள்

தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் வேலை வாய்ப்புகள்..!

எதிர்காலத்தில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நாடுகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எதிர்காலத்தில் தென் கொரியாவில், இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக அஜித் கிஹான் கூறியுள்ளார்.

இதேவேளை ஜப்பானில் சுமார் 9,300 வேலை வாய்ப்புகளையும், இஸ்ரேலில் சுமார் 15,900 வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்டுமானம், மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சேவைத் துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  

Related posts

மகரகம வைத்தியாலைக்கு விஜயம் செய்த கதிஜா பவுண்டேசன் நிர்வாகிகள்

wpengine

மஹிந்தவுக்கு வந்த புதிய பிரச்சினை பதவிக்கு ஆப்பு

wpengine

வேலை கிடைக்காததால் பல்கலைக்கழக பட்டதாரி இலைஞ்சர் தற்கொலை.

Maash