Breaking
Sun. Nov 24th, 2024

– அபூ அஸ்ஜத் –

பாரதுாரமான குற்றத்தை செய்தார்கள் என்று தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் எண்மாரின் விடுதலை தொடர்பில் முயற்சிகளை செய்த அனைவருக்கும் நன்றிகளை கைதான மாணவர்களின் பெற்றோர்களும்,மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.


தங்களது விடுதலைக்காக உதவிகளை செய்தமைக்காக நேற்று பெற்றோர்கள் சிலரும்,மாணவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்தனர்.

மாணவர்கள் கைது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரான சஜித் பிரேமதாசவுக்கு இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.நீண்டதொரு கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதனையடுத்து இந்த மாணவர்களின் விடுதலைக்காக நீதிமன்ற நடவடிக்கை மிகவும் முக்கியம் என்பதால் சட்டத்தரணிகளுடன் அமைச்சர் பேசியுள்ளார்.

இதே வேளை குறிப்பாக சமூகம் சார்ந்த விடயங்களில் முன்னின்று செயற்பட்டுவரும் சட்டத்தரணிகளில் சிராஸ் நுார்தீன்,ருஸ்தி ஹபீப் போன்றவவர்கள் இந்த விடயத்தில் மிகவும் ஆழமாகவும்,வேகமாகவும் செயற்பட்டதினால் இந்த மாணவர்களின் விடுதலையும் சாத்தியமாகியுள்ள நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை நேற்று இரவு சந்தித்த பெற்றோர்கள் அமைச்சர் எடுத்த முயற்சிகளுக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது அமைச்சருடன் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன்,நுகர்வோர் கூட்டுறவு சம்மேளனத்தின் பணிப்பாளர் தொழிலதிபர் எஸ்.எம்.றியாஸ்,லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவரும்,முன்னாள் கல்முனை மேயருமான கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் உட்பட பலரும் சமூகமளித்திருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *