பிரதான செய்திகள்

துறைமுக அதிகார சபை பணிப்பாளரின் வீட்டில் கொள்ளை – மூவர் கைது!

கடுவலை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் மனிதவள முகாமையாளரின் வீட்டில் கத்தியை காட்டி கொள்ளையடித்து வீட்டுப் பணிப்பெண்ணிடம் இருந்து சுமார் 1 1/2 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கொள்ளையை மேற்கொண்டவர், கொள்ளைக்கு திட்டமிட்டவர் மற்றும் கொள்ளைச் சொத்துக்களை மறைத்து வைத்திருந்தவர் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 35 இலட்சம் ரூபா பணத்தில் கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரூபா, 10950 அமெரிக்க டொலர்கள் மற்றும் சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்த பயன்படுத்தப்படாத வெடிகுண்டு.

அத்துடன் போதைப்பொருட்கள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கொள்ளை சம்பவம் கடந்த மாதம் 12ம் திகதி நடந்தது.

பணிப்பெண்ணின் கணவனும் குழந்தையும் பல நாட்களாக பணிப்பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், பணிப்பெண் அவர்களை கிராமத்திற்கு அழைத்துச் செல்ல மஹரகம சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பின்னால் வந்து கைகளை கட்டி கொலை மிரட்டல் விடுத்தாக குறித்த பணிப்பெண் அன்றைய தினம் பொலிஸாரிடம் கூறினார்.

பின்னர் குறித்த பணிப்பெண்ணை அழைத்து, வீட்டில் உள்ள பெறுமதியான பொருட்கள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு மிரட்டியதாகவும், பணிப்பெண் அந்த இடத்தைக் காட்டியதையடுத்து, கொள்ளையன் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில், இந்த கொள்ளையிட்டுச் சென்ற நபர் குறித்த வீட்டின் மேற்கூரையை பலமுறை பழுது பார்க்க வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

Related posts

அரசியல் சாக்கடையில் காலம் என்னையும் வீழ்த்தியது – யாழில் மஸ்தான் எம்.பி தெரிவிப்பு

wpengine

11வயது மாணவனை தாக்கிய விஞ்ஞான ஆசிரியர்

wpengine

எம்.எச்.முஹம்மதின் மறைவு நாட்டு மக்களுக்கு பாரிய இழப்பாகும் அமைச்சர் றிசாத்

wpengine