Breaking
Sun. Nov 24th, 2024

(அப்துல் ஹமீட்)
அகில இலங்கை மக்கள் காங்கிரசிஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு துரோகிகளுடன் அமைச்சர் ரிஷாட் கைகோர்த்துள்ளதாகவும் துரோகிகளினாலே அவருடைய அரசியல் பயணத்திற்கு ஆபத்து ஏற்படும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

அல் ஹஸ்ஸால் அல் அபியத் அமைப்பினால் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பிற்கான காசோலை கையளிக்கும்; நிகழ்வு வெள்ளிக்கிழமை (25) ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.12439188_184717968585675_5382129266018134432_n

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் மரைவின் பின்னர் அக்கட்சி வழிதவறிச் செல்வதாகக் கூறிக்கொண்டு மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டு கட்சி அமைத்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தற்போது கட்சியை ஆரம்பிப்பதற்கும் அக்கட்சி வளர்ச்சிக்காக பல அர்ப்பணிப்புக்களைச் செய்தவர்களையும் ஓரங்கட்டிவிட்டு துரோகிகளுடன் கைகோர்த்துள்ளார். இந்த துரோகிகளினாலே அவருடைய அரசியல் இருப்புக்கு ஆபத்து ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

கட்சியை உருவாக்குவதற்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் நம்பிக்கையோடு உழைத்த கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட்டுக்கு தேசியப் பட்டியல் வழங்கி நன்றி செலுத்துவேன் என சத்தியம் செய்து வாக்குறுதியளித்த கட்சித் தலைவர் இறுதியில் செயலாருக்கு துரோகமிழைத்துவிட்டு; அக்கட்சியில் இருந்து செயலாளரை ஓரங்கட்டிவிட்டார். குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருந்த புத்திஜீவியும் நேர்மையானவருமான வை.எல்.எஸ் ஹமீட்டை வெளியேற்றியதனூடாக ரிஷாட் பதியுத்தீனுடைய தலைமைத்துவப் பண்புகள் நம்பகத்தன்மைகள் கேள்விக்குறியாகிவிட்டது.11202093_184712681919537_3500102349656079684_n

இச்சந்தர்ப்பத்திலேதான் செயலாளர் நாயகம் தனக்கு இழைக்கப்பட்ட அநிதிக்கு எதிராகவும் திருட்டுத்தனமாக பேராளர் மாநாட்டைக் கூட்டி கட்சிக்காக உழைத்தவர்களை சட்டத்திற்கு முரனாக ஓரங்கட்டியதற்காகவும் நீதி வேண்டி நீதிமன்றம் சென்றதனை நாம் மறந்துவிட முடியாது. அதே போன்றுதான் நானும் அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்து கட்சியை நாடாலவிய ரீதியில் விஸ்தரிப்புச் செய்வதற்கும் பாடுபட்டவன் எனது செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சா ரிஷாட் பேசிய விடங்கள் ஆதாரங்களாக இன்னும் இருக்கின்றன அப்படிப்பட்ட என்னை துரோகிகளின் கதைகளைக்கேட்டுக் கொண்டு கட்சியைவிட்டு ஓரங்கட்டியிருப்பது அவருடைய தலைமைத்துவத்திலுள்ள பலவீனமே தவிர வேறொன்றுமில்லை கட்சிக்காக அர்ப்பணிப்புகளைச் செய்த எங்களுக்கு துரோகமிழைத்த அமைச்சர் ரிஷாட்டின் அரசியல் பயணம் துரோகிகளினாலே அழிக்கப்படும் என்பதனை இந்த இடத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

தற்போது எமது நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கின்ற புதிய அரசியல் அமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறை மாற்றம் இனப்பிரச்சிணைக்கான தீர்வு போன்ற விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய எமது அரசியல் தலைமைகள் தனது கட்சி உட்பூசலில் சிக்கிக்கொண்டு இன்று நீதி மன்ற நாட்காளிகளில் குந்திக்கொண்டிருப்பதனை பார்க்கும்போது மிகவும் கவலையாகவுள்ளது. இந்த அரசியல் தலைமைகளால் எமது சமூகத்தினுடைய அரசியல் இருப்புக்கள் பற்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிந்தித்த வரலாறுகள் கிடையாது. அவர்கள் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு சம்பாதிக்கக்கூடிய அமைச்சுக்களைப் பெறுவதில் மட்டுமே ஆர்வம் செலுத்தினார்கள்

குறிப்பாக அரசாங்கத்தோடு பங்காளியாக பெரும் அதிகாரங்களைப் பேரம்பேசிப் பெற்றுக்கொண்டு அமைச்சராகவிருக்கின்ற ரிஷாட் பதியுத்தீன் வடபுல முஸ்லிம்கள் மீது அக்கரை செலுத்தி அவர்களுக்கு எந்தவொரு நிலையான தீர்வினையும் பெற்றுக்கொடுக்க முற்படவில்லை காரணம் தனது சுயநல அரசியலை நிலையாக தக்கவைத்துக்கொள்வதற்காக வடபுல முஸ்லிம்களின் பிரச்சிணைகள் அவருக்கு அத்தியவசியமான விடயமாகும் இதனையே அவருடைய அரசியல் இருப்புக்கான ஒரு பிரச்சாரமாக முன்னெடுப்பதனை வடபுல முஸ்லிம்கள் தெளிவாக புரிந்தகொள்ள வேண்டும்.

இன்று அமைச்சர் ரிஷாட் மீது குற்றம் சுமத்தப்பட்டு சமூக வலயதளங்களிலும், ஊடகங்களிலும் பந்தாடப்படுகின்ற அளவிற்கு அவரின் செயற்பாடுகள் மாறியிருக்கின்றது. கைத்தொழில் அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் செய்ததிலும் அமைச்சர் ரிஷாட்டின் மீது சந்தேகம்கொள்ளப்பட்டு பல விமர்சனங்கள் வெளியானதையும் இந்த இடத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நமது நாட்டிலே நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதற்கு பின்னர் எமது ஜனாதிபதி அவர்கள் சீருடை வழங்கும் முறையில் மாற்றத்தினைக் கொண்டுவந்து அந்தப்பொறுப்பினை கல்வி அமைச்சரிடம் வழங்கினார். நாட்டின் மீது அக்கரைகொண்டு செயற்பட்ட கல்வி அமைச்சர் ஐயாயிரம் மில்லியன் ரூபாய்களை இலாபமீட்டி தனது நேர்மையான செயற்பாட்டினை வெளிப்படுத்திருப்பதனை நாம் மறந்துவிடமுடியாது. இந்த இடத்தில் ஒப்பீட்டுப் பார்க்கும் போது நமது அரசியல் தலைமகள் சுயநலம் கொண்டவர்களாகவே சமூகத்தில் பார்க்கப்படுகின்றனர்.

எமது அரசியல் தலைமைகள் இன்று நேர்மையானவர்களை ஓரங்கட்டிவிட்டு துரோகிகளொடு கைகோர்த்துக்கொண்டு சம்பாதிக்கின்ற நடவடிக்கைகளிலே ஈடுபட்டார்களே ஒளிய சமூகத்திலே எமது மக்கள் எதிர்நோக்குகின்ற எந்தவொரு பிரச்சிணைகளையும் கருத்திற்கொண்டு செயற்பட்டதில்லை குறிப்பாக கைத்தொழில் அமைச்சை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஆர்வம் காட்டும் அமைச்சர் ரிஷாட் ஏன் வடபுல சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய அமைச்சொன்றைப் பெற்று அந்த மக்களுக்கு சேவையாற்ற முற்படவில்லை என்ற கேள்வி பலரிடத்திலும் காணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *