பிரதான செய்திகள்விளையாட்டு

துரையப்பா விளையாட்டரங்கு ஜனாதிபதி ,இந்தியா பிரதமர் திறந்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை திறந்து வைத்துள்ளார்.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளைச் சேர்ந்த 11 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட யோகா சிறப்பு நிகழ்வொன்றும் நடைபெற்றிருந்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துரையப்பா விளையாட்டரங்கின் திறப்பு வைபவத்தில் காணொளி மூலமாகக் கலந்து கொண்டதுடன், அங்கு நடைபெற்ற யோகா பயிற்சிகளையும் பார்வையிட்டிருந்தார்.

புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைக்கக் கிடைத்தமை பெரும் பாக்கியம் என்று கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இதன் மூலம் இந்திய-இலங்கை நல்லுறவு மென்மேலும் பலம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.625.0.560.320.500.400.197.800.1280.160.95

ஜனாதிபதி மைத்திரிபாலவின் உரையை அடுத்து தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3)

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2)

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)

Related posts

இளம் கண்டு பிடிப்பாளர் யூனூஸ்கானுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஷிப்லி பாறுக்

wpengine

ஒபாமாவை சந்திக்காத ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார் (விடியோ)

wpengine

இறக்காமம் பிரதேச சபைக்கு ஆதரவு வழங்கி பிரதி தவிசாளர் பதவியினை அ.இ.ம.கா கைப்பற்றியது

wpengine