பிரதான செய்திகள்

துமிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பந்துல கோரிக்கை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

பதிவுத் தபாலில் விசேட கடிதமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக பந்துல தெரிவித்துள்ளார்.

சொந்தக் கையெழுத்தில் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் பின்வருமாறு கூறியுள்ளார்.

ஹோமாகம தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராக எனக்கு அறிவிக்காமல் தொகுதியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாண அமைச்சர் காமினி திலகசிறிக்கு கடிதம் ஒன்றின் மூலம் கூட்டமொன்றை ஒழுங்கு செய்யுமாறு துமிந்த திஸாநாயக்க உத்தரவிட்டமை, கூட்டத்தில் பங்கேற்றமை, உரையாற்றியமை என்பன கட்சி ஒழுக்க விதிகளுக்கு புறம்பானதாகும்.

எனவே துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடிதம் ஊடாக ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக பந்துல குணவர்தன கோரியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆவணத்தின் பிரதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

பதவியை தட்டில் வைத்து தாரைவார்த்துக் கொடுப்பதற்கு தயார்: பேராளர் மாநாட்டில் ரவூப் ஹக்கீம்

wpengine

மன்னாரில் வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினம் அனுஷ்டிக்க அழைப்பு!

Editor

சரத் பொன்சேகா கூடிய விரைவில் மகிந்த அணியுடன் இணைந்து கொள்ளலாம்

wpengine