Breaking
Sat. Nov 23rd, 2024

(Fahmy Mohideen-UK)

உலகத்தில் முதலாளித்துவமும்,சோஷலீசமும் தனது இருப்பை பாதுகாக்க அராஜகத்தையே அரங்கேற்றுகிறது.குறிப்பாக முஸ்லீம் நாடுகளில் சீயா மற்றும் சுன்னிப் பிரிவுகளை தீமூட்டி வளர்ப்பதன் மூலம் ஆயுதவிற்பனை மற்றும் சுரண்டல் வியாபாரத்தை நடாத்துகிறது.

இஸ்லாம் ஒன்றே.இறைத்தூதரும் ஒன்றே.இஸ்லாத்தை பிளவுபடுத்த பலநூற்றாண்டுகளாக ,குறிப்பாக கவாரிஜிகள் முதல் மேற்கொள்ளப்பட்ட சகல துரோகங்களும் தோற்கடிக்கப்பட்டது.

இதனால் முஸ்லீம்களின் ஈமானை பலவீனப்படுத்த முடியாது என்பதை யகூதிகள் நன்கு அறிந்தனர்.இதனால் ஈமானில் சந்தேகத்தை குறைந்த பட்சம் உருவாக்க அரங்கேற்றிய நச்சுத்தீயே சீயா vசுன்னி சித்தாந்தங்களாகும்.

எமக்கு இறைத்தூதர் காட்டிய வழிமுறைகளிலோ,கலிபாக்களின் செயற்படுத்தலிலோ ஏகத்துவம் ஒன்றே பொதுவானது.சிலசில செயற்பாடுகளில் முரண்பாடுகள் இருக்கலாம்.ஆனால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் நமக்குள் பிரிவினை கிடையாது.

அன்றைய இஸ்லாமிய ஷாம் இராஜ்யத்தின்  ஒருபகுதிதான் இன்றைய சிரியா.இஸ்லாமிய வரலாற்றில் ஷாம் என்று அழைக்கப்படும் பிரமாண்டமான பிரந்தியத்தின் ஒரு பகுதி ( பலஸ்தீன் ,ஜோர்தான் ,லெபனான் , சிரியா என்பன ஷாம் பிரதேசத்தில் உள்ளடங்கும் நாடுகள் ) இதன் சிறப்புகள் பற்றி ஏறாளமான ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்களால் முன்மொழியப் பட்டுள்ளது .

இதனுடைய பரப்பளவாக 185 சதுர கி.மீ பரப்பைக் கொண்டுள்ளது. மேலும் மத்திய தரைக் கடலோரத்தின் சிறிய பகுதியையும் மத்திய தரைக் கடலிலுள்ள எர்வத் எனப்படும் சிறிய தீவையும் கோலான் குன்றுகளையும் கொண்டுள்ளது. மேலும் ஜபலுஷ் ஷெய்க் என்ற நாட்டின் மிக உயரமான மலையையும் கொண்டுள்ளது . இதன் உத்தியோக பூர்வ மொழியாக அரபு , ஆங்கிலம் , பிரெஞ்சு மற்றும் குர்தி போன்ற மொழிகள் உள்ளன. இதன் தலை நகராக டமஸ்கஸ் ( Damascus ) காணப்படுகிறது.

சிரியாவின் மாகாண அதிபராக முஆவியா ( றழி ) நீண்ட காலம் பதவி வகித்தார். இவருடைய ஆட்சியில் இருந்து உமையா வம்ச ஆட்சி தொடங்கியது சும்மார் 90 வருடங்களாக டமஸ்கஸ் தலைநகராக இருந்தது.

பின்னர் 1517 இல் துருக்கிய மன்னர் முதலாம் ஸலீம் சிரியாவை உஸ்மானிய சாம்ராஜியத்தோடு இணைத்தார். இவ்வாறு மூன்று நூற்றாண்டுகள் சிரியா உஸ்மானிய சாம்ராஜியத்தின் கீழ் இருந்தது. முதலாம் உலகப் போரில் துருக்கி பலவீனப் படுத்தப் பட்டதால் அதன் கீழ் இருந்த பிராந்தியங்கள் காலனித்துவ சக்திகளால் துண்டாடப் பட்டன. இதற்கமைவாக சிரியா பிரான்ஸின் காலனித்துவ நாடாக மாறியது. 1941 இல் பிரான்ஸிடமிருந்து சிரியா அரசியல் சுதந்திரம் பெற்றது. 1945 இல் தேர்தல் மூலம் அங்கு ஒர் தேசிய அரசாங்கம் நிறுவப் பட்டது . இதன் ஜனாதிபதியாக சுக்ரி குவைலித் தெரிவானார். 1958 இல் எகிப்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரு நாடுகளும் தம்மை ஐக்கிய அரபுக் குடியரசு என அறிமுகம் செய்தன . 1961 இல் இராணுவ சபை உருவாக்கப்பட்டு பின்னர் எகிப்திலிருந்து சிரியா பிரிக்ப்பட்டது.

ஆனக நாஸிம் அல் குத்ஸி ஜனாதிபதியகத் தெரிவு செய்யப்பட்டார். 1963 மார்ச் 8 இல் ஜனாதிபதி நாஸிம் அல் குத்ஸியின் அரசாங்கம் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் திட்டமிட்டு பதவி கவிழ்க்கப்பட்டது. அப்போதைய இராணுவத் தளபதியாக ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் என்பவரே பிரதான சூத்திரதாரியாக இருந்தார். பின்னர் ஜெனரல் ஹாபிஸ் அல் அஸத் புரட்சி மூலம் ஜனாதிபதி பதவிக்கு வந்தார். இவர் சுமார் 2000 ஆண்டு வரையும் சிரியாவின் சக்தி வாய்ந்த ஆட்சியாளராக இருந்தார். 2000 இல் அஸாதின் மரணத்தைத் தொடர்ந்து அவனது மகன் கொடுங் கோலன் பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு வந்தான் .

இவ்வாறு பஷாரின் 53 வருட குடும்ப ஆட்சியின் கொடுமைகளையும் ஊழல்களையும் சகிக்க முடியாத சிரியா மக்கள் பஷாரின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு எதிராக சிரியா மக்கள் கொந்தழிக்க ஆரம்பித்தார்கள் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் சுமார் 53 வருடங்கள் 16 % வீதம் கொண்ட ஷீஆக்கள் 76 % வீதம் கொண்ட சுன்னி முஸ்லிம்களை அடக்கி ஆண்டு வருகின்றார்கள்.

இப்படி அடக்கி ஆழப்பட்ட மக்கள் ஊழல் நிறைந்த பஷாரின் ஆட்சிக்கு எதிராக கொந்தழித்தெழுந்தபோது அது 2011 பெப்ரவரி 17 அன்று உள்நாட்டு போராக மாறியது . அந்நாட்டின் அதிபர் ஆசாதுக்கு எதிராக நடந்துவரும் உள்நாடு போர் இன்றுவரை உக்கிரமடைந்து வருகின்றது.

jஇன்று சிரியா isis அமைப்பினர்களிடம் ஒரு பகுதியும், சிரியா சுன்னி முஸ்லிம்களிடம் ஒரு பகுதியும், சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளன் பஷார் அல் அஸாத்திடம் ஒரு பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து அழிக்கப்பட்டு வருகின்றது.

இன்று நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் 97.% சதவீதம் அழிந்து போய்விட்டன.

இஸ்லாமிய நாடுகளில் ஒற்றுமையை சீரழிக்கவும்,இஸ்லாத்தை அழிக்கவும் சியா,சுன்னி என்ற நச்சுவிதையை திட்டமிட்டு விதைத்தனர்.இதன் அருவடையை சிரியா உற்பட சகல நாடுகளிலும் காணக்கூடியதாக உள்ளது.

இதுவே நவீன காலனித்துவமாகும்.இன்று சிரியாவில் நடக்கின்ற மனிதநேயத்தை நிலைகுலைய வைக்கின்ற செயற்பாடுகளை மேற்குலகும், ஐநா சபையும் கைகட்டிப் பார்க்கின்றது.

ரஷ்யா,ஈரான் மற்றும் அமெரிக்காவின் வரட்டுக் கௌவரத்திற்காக ஈமானிய உறவுகள் பழியாக்கப்படுகின்றனர்.இஸ்லாமிய வரலாற்றில் மட்டுமல்ல இறைத் தூதரால் கண்ணியப்படுத்தப்பட்ட பூமி.இன்று மரண ஓலங்களால் நிறைந்து கிடக்கிறது.

இன்ஷா அல்லாஹ்!இன்ஷா அல்லாஹ் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் மீது நம்பிக்கை கொண்ட மக்களை நிச்சயம் இறைவன் பாதுகாப்பான்.இறைவனின் விருப்புக்கு மாறாக எந்த ஏகாதிபத்தியமும் வெற்றிபெற முடியாது.

இந்த மக்களின் தற்போதைய நிலை சகலருக்கும் படிப்பினையாக இருக்க வேண்டும். தனது அடியார்களுடனே இறைவன் இருப்பான் என்ற நம்பிக்கையில் பிராத்தனை செய்வோம்.இறைவன் நிச்சயம் இதில் நல்லசெய்தியை வைத்திருப்பான்.இஸ்லாத்தை ஒருபோதும் காபிர்களின் துப்பாக்கி ரவைகள் மரணிக்க வைக்க முடியாது.நாம் மறுமை நாள்வரைக்கும் பாதுகாக்கப்பட உத்தரவாதம் வழங்கப்பட்ட நம்பிக்கையின் அடியான்களாகும்.

அல்ஹம்துலில்லாஹ் இந்த அளவுகடந்த வன்முறையால் சீயாப் பிரிவு அரசாங்கம் தனது மக்களிடமே எதிர்ப்பை முகம்கொடுத்துள்ளது.இந்த வன்முறைமூலம் அப்பாவி சுன்னா முஸ்லீம்களின் ஈமானை அரசாங்கத்தால் வெற்றிகொள்ள முடியவில்லை.இறைவன் நாட்டம் எதிலும் இருக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு முஸ்லீமுக்கும் அவசியமாகும்.

அதன் பிரகாரம் சீயா பிரிவு மக்கள் தங்களது அரசாங்கத்தின் கொள்கைகளால் நாளுக்குநாள் கோபமடைந்து சுன்னிசார் கொள்கைகளின் பக்கம் போகின்றனர்.அல்லாஹ் போதுமானவன்.சிரியாவை அழித்துவிடுவதோ,சுன்னிமக்களை ஒழித்துவிடவோ முடியாது.இந்த யுத்தத்தின் முடிவில் சீயாக் கொள்கை அந்த மண்ணில் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.

தோற்றுப்போகாத ஒருஈமானுயத்துக்காக சிரியாவை இறைவன் பாதுகாப்பான்.

இந்த சிரியா மக்களுக்காக பிராத்திப்போம்.அவர்களுக்கு உறுதியான ஈமானையும் பாதுகாப்பையும் வழங்குமாறு இறைவனிடம் பிராத்திப்போம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *