துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில் தற்போது 20 வரையான குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர்.
அதாவது துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் சொந்தக்காணிகள் இன்றி வாழ்ந்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 2012ம் ஆண்டு மேற்படி இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தின் மாதிரிக்கிராமத்தில் 50 வரையான குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.
குறித்த குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் இன்மை, குடிநீர் வசதிகள் இன்மை, மாற்றுத்திறனாளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்பினை காட்டு யானைகளின் தொல்லை போன்ற காரணங்களால் குறித்த மாதிரி வீட்டுத்திட்டத்திலிருந்த ஐம்பது வரையான குடும்பங்களில் 30 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளன.
அத்துடன் தலா பத்து இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் யாவும் உரிய முறையில் அமைக்கப்படாமல் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.