இராணுவ நிலைகள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் கடுமையாக தாக்கி வருகின்றது. இதனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கின்றது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவம் பதிலடி கொடுத்து வருகின்றது. சமாதான பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால், ஓராண்டைக் கடந்தும் சண்டை நீடிக்கின்றது.
இந்நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா இன்று அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 2 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், 2 ஏவுகணைகள் உமான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை தாக்கியுள்ளது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கிய 17 பேர் காயமடைந்துள்ளனர். 3 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலைநகர் கீவ் மீது முதல் முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கீவ் மீது பறந்த 11 ஏவுகணைகள் மற்றும் 2 ஆளில்லா விமானங்களை உக்ரைன் விமானப்படை இடைமறித்ததாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.