மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவியமையை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ளேன்.
இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்ற செயலாகும்.
ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற இச்செயலானது கேலிக்குரியது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீனின் டுவிட்டர் பக்கத்திலும் இந்தக் கண்டனம் பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.