பிரதான செய்திகள்

தீபாவளி அன்று கழுத்தறுத்துக் கொலை! கணவன் வெளிநாட்டில் மனைவி,மகன்

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

குறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் இளம் தாயெனவும் கணவன் வெளியூரில் வசிப்பதாகவும் தெரிய வருகின்றது.

இச் சம்பம் இரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார் சம்பம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிளவிலேயே தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

கழுத்தறுத்துக் கொலை செய்யபட்டவர்கள் ராஜா மதுவந்தி 26 வயதெனவும் மதுசன் வயது 11 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி தினமான இன்று இக் கொடூரச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் அப் பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

றிஷாட்,மனோ,கூட்டமைப்பு தரப்புக்கள் வாக்களிக்கவில்லை-டலஸ்

wpengine

மண்முனைப்பற்று கோவில் குளம் கிராம மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு

wpengine