பிரதான செய்திகள்

தீக்காயங்களுடன் உயிரிழந்த முஸ்லிம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம்

தீக்காயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – அனுராதபுரம் வீதி, கடையாகுளம் பிரதேசத்தில் வசிக்கும் முருசலின் பஸ்லீன் என்ற பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் கடுமையான தீக்காயங்களுடன் கடந்த 29ம் திகதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு தீக்காயம் ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பிரதேசத்தில் வெவ்வேறான கருத்துக்கள் உள்ளதனால் அது சம்பந்தமாக விசாரணைகளை நடத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனைகள் புத்தளம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீக்காயங்களினால் குறித்த பெண்ணின் உடலில் உள் உறுப்புகளுக்கு சேதம் ஏற்பட்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக அந்த பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Related posts

கிழக்கு மாகாண சபைக்கு நாளை இறுதி நாள்

wpengine

அலரி மாளிகை முன்றலில் சொகுசு கார் விபத்து; சாரதி பொலிசாரால் கைது!

Editor

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு நியூசிலாந்தில் அமோக வரவேற்பு!

Editor