பிரதான செய்திகள்

தீக்கரையாகிய 30 மோட்டார் சைக்கிள்களும், 25 துவிச்சக்கர வண்டிகளும்!

வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.

இந்த சம்பவம் நேற்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

தூர இடங்களுக்கு வேலைக்காக பஸ்களில் செல்லும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்துச் செல்லும் தரிப்பிடமே தீப்பிடித்து எரிந்துள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும், 25 இற்கும் மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் முழுமையாக தீயில் கருகியுள்ளன.

தரிப்பிடத்திற்கு அருகில் குப்பைக்கு மூட்டப்பட்ட தீ காற்றில் பரவி மோட்டார் சைக்கிள்களில் விழுந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த அனர்த்தம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு!மாதம் ஒன்றுக்கு 220 கோடி ரூபா தேவை

wpengine

ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் யார் ? தீர்மானம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க.

Maash

பேஸ்புக் தற்கொலைக்கு புதிய தொழில்நூட்பம்

wpengine